உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை கட்டடம்

ஓராண்டாக திறக்காத புதிய ரேஷன் கடை கட்டடம்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்டது சக்கரமநல்லுார் கிராமம். இங்கு, 100க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.இவர்களுக்கு 2 கி.மீ., துாரத்தில் திருவாலங்காடு அரசு பள்ளி அருகே அமைந்துள்ள ரேஷன் கடையில், பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், பொருட்களை வாங்கி வர முடியாமல் முதியவர்கள் மற்றும் பெண்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதை தொடர்ந்து, தங்கள் பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, 15 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, கடந்தாண்டு திருவள்ளூர் சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில், 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு கட்டடம் கட்டப்பட்டது. கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, ஓராண்டான நிலையில், தற்போது வரை ரேஷன் கட்டடம் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், உணவு பொருள் வழங்கல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, சக்கரமநல்லூர் மக்களின் நலன் கருதி, புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை