மேலும் செய்திகள்
மருத்துவமனை வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
03-Sep-2024
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே பில்லாக்குப்பம் கிராமத்தில் வசித்தவர் மணி மகன் அஜய், 22. வெல்டர். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். இந்நிலையில் பில்லாக்குப்பம் கிராமத்தில் ஒதுக்குபுறமாக உள்ள தைலந்தோப்பு அருகே உள்ள மைதானத்தில், நேற்று மதியம், கழுத்து, பின் தலை மற்றும் உடல் முழுதும் மர்ம நபர்களால் வெட்டுப்பட்டு கொடூரமாக இறந்து கிடந்தார். தகவல் அறிந்து சென்ற கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., சீனிவாச பெருமாள், கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., அண்ணாதுரை ஆகியோர் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். நேற்று முன்தினம் இரவு சம்பவம் நடத்திருக்க கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். முன்விரோதம் காரணத்தால் நடந்த கொலையா அல்லது நண்பர்களுடன் மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நடந்த கொலையா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
03-Sep-2024