மீன் ஏற்றி சென்ற வாகனம் கவிழ்ந்து 14 பேர் காயம்
திருவாலங்காடு: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த தெக்களூரைச் சேர்ந்த குப்பம்மாள், 50, சரத்குமார், 30, உள்ளிட்ட 14 பேர் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் இரவு, சென்னை காசிமேடுக்கு மீன் வாங்கி வர 'டாடா ஏஸ்' வாகனத்தில் சென்றனர்.நேற்று காலை 8:00 மணியளவில், வழக்கம்போல சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினர். திருவள்ளூர் அடுத்த ராமஞ்சேரி அருகே வந்த போது, வாகனத்தின் டயர் வெடித்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.இதில், வாகனத்தில் பயணித்த 13 பெண்கள், ஒரு ஆண் உட்பட 14 பேரும் காயமடைந்தனர். அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து அறிந்த கனகம்மாசத்திரம் போலீசார், ஓட்டுனர் நரேந்திரன், 25, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.