உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அனுமதியின்றி தென்னங்கன்று விற்றால் நடவடிக்கை

அனுமதியின்றி தென்னங்கன்று விற்றால் நடவடிக்கை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், அனுமதியின்றி காய்கறி விதை மற்றும் தென்னங் கன்றுகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.சென்னை மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் ரவி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், தென்னை, காய்கறி விதை மற்றும் கன்றுகள், பழக்கன்றுகள் ஆகியவற்றை விற்பனை செய்ய உரிய அனுமதி பெற வேண்டும்.உரிய அனுமதியின்றி அவற்றினை விற்பனை செய்யக் கூடாது. அவ்வாறு உரிமம் இன்றி விதை மற்றும் கன்றுகளை விற்பனை செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.நர்சரி உரிமையாளர்கள் உரிமம் இல்லாமலும், கொள்முதல் பதிவுகளை இருப்பு பதிவேட்டில் பதியாமல் மற்றும் விற்பனை ரசீது வழங்காவிட்டாலும், அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.புதிய உரிம்ம பெற, seedcertification.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை