உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காதை பதம் பார்க்கும் பேருந்து ஏர் ஹாரன்

காதை பதம் பார்க்கும் பேருந்து ஏர் ஹாரன்

திருவள்ளூர: சென்னையில் இருந்து திருப்பதி, திருத்தணி செல்லும் வாகனங்கள் அனைத்தும், திருவள்ளூர் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை வழியாக பயணிக்கின்றன. இச்சாலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், வங்கிகள், மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்றம், பள்ளிகள் அமைந்து உள்ளன. இச்சாலையில் தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், லாரி, பேருந்துகள் போன்றவற்றில் அதிக ஒலி ஏற்படுத்தும் வகையில், 'ஏர் ஹாரன்' பொறுத்தப்பட்டு உள்ளது.இந்த வாகனங்களில் இருந்து எழுப்பப்படும் ஒலியால், முன்னால் செல்லும் வாகன ஓட்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். சாலையோரம் அமைந்துள்ள மருத்துவமனைகள், அரசு அலுவலகங்களில் இருப்பவர்களும், திடீரென அதிக சத்தத்தில் எழுப்பப்படும் ஒலியால் அதிர்ச்சியடைகின்றனர்.இதை தவிர, சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் ஒலி மாசுவால் தடுமாறி விபத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து துறையினர், கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் வகையில் பொறுத்தப்பட்டு உள்ள 'ஏர் ஹாரன்'களை பறிமுதல் செய்து, வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ