மேலும் செய்திகள்
ஏரி நிரம்பி கோடி விழுந்த இடத்தில் உடைப்பு
17-Aug-2024
ஆர்.கே. பேட்டை:ஆர்கே பேட்டை ஒன்றியத்தின் மேற்கில் பாலாபுரத்தை ஓட்டி, ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட எல்லையில் புல்லூர் காப்புக்காடு அமைந்துள்ளது. சிறந்த நீர் பிடிப்பு பகுதியாக விளங்கும் இந்தப் பகுதியில் இருந்து உருவாகும் ஓடைகள், பொல்லி மலை வழியாக ஒடையாக பாய்ந்து, அம்மலேரி ஏரியை வந்தடைகிறது. அம்மலேரி ஏரியின் மூன்று திசையிலும் மலைகள் அமைந்துள்ளன. இதனால் இந்த ஏரிக்கு ஆண்டுதோறும் நீர்வரத்து சிறப்பாக அமைந்திருப்பது வழக்கம். நடப்பாண்டில் இதுவரை நீர்வரத்து துவங்கவில்லை. இதனால் அம்மலேரி ஏரி, குட்டை போல் காட்சியளிக்கிறது. அமலே ஏரி நிரம்பினால் அதிலிருந்து வெளியேறும் உபரி நீர் ஆர்கே பேட்டை ஒன்றியத்தின் பல்வேறு ஏரிகளை நிரப்பி, கொசஸ்தலை ஆற்றில் கலக்கும். ஒன்றியத்தின் முதல் ஏரியாக விளங்கும் அம்மலேரி ஏரி, வறண்டு கிடப்பது விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
17-Aug-2024