உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆவணி அமாவாசை தர்ப்பணம்

ஆவணி அமாவாசை தர்ப்பணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் நேற்று ஆவணி அமாவாசை முன்னிட்டு, பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தனர்.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும், தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தங்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். நேற்று ஆவணி அமாவாசை தினத்தை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் முந்தைய தினம் இரவே கோவில் வளாகத்தில் குவிந்தனர்.நேற்று காலை, ஹிருதாபநாசினி குளத்தில், பக்தர்கள் தங்கள் தர்ப்பணம் செய்தனர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவரை தரிசனம் செய்தனர். வீரராகவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !