உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தார்ப்பெயர்ந்த சாலையால் தொழுதாவூரில் அவதி

தார்ப்பெயர்ந்த சாலையால் தொழுதாவூரில் அவதி

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூரில் இருந்து சின்னம்மாபேட்டை வரையிலான தார்ச்சாலை, 2 கி.மீ., தூரம் கொண்டது. இந்த சாலை வழியாக தினமும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் திருவள்ளூர் கடம்பத்தூர் அரக்கோணம் ஸ்ரீ பெரும்புதூர் உள்ளிட்ட நகரங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கலைஞர் நகரிலிருந்து இருந்து நாகாத்தம்மன் கோவில் வரையிலான 1 கி.மீ., சாலை மிகவும் சேதமடைந்து தார், ஜல்லி பெயர்ந்து பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது.சேதமடைந்த சாலையால் பல்வேறு விபத்துகளில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் வாகன ஓட்டிகள் தாமாக விபத்தில் சிக்குவதால் அவதியடைந்து வருகின்றனர்.இந்நிலையில் வாகன ஓட்டிகள் சென்று வர லாயக்கற்ற நிலையில் தார்ச்சாலை உள்ளதால் அதை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை