உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் தொடரும் பேனர் கலாசாரம்

திருவள்ளூரில் தொடரும் பேனர் கலாசாரம்

திருவள்ளூர்:சென்னை பள்ளிக்கரணையில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ, 23 என்ற பெண் லாரியில் சிக்கி இறந்தார்.இதையடுத்து நெடுஞ்சாலையோரங்களில் விளம்பர பேனர்கள் வைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.இந்நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், சென்னை - பெங்களூரு தேசிய அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலை, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் உயரமான கட்டடங்கள் மீது விளம்பர பேனர்கள் மற்றும் திருமண வரவேற்பு பேனர்கள், மொபைல்போன் டவர்கள் வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.மேலும், திருவள்ளூரில் கலெக்டர் அலுவலகம் எதிரில், ஜே.என்.சாலை, சி.வி. சாலை, திருவள்ளூர் - ஆவடி புறவழிச் சாலை, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தாராட்சி, பூண்டி, ஒதப்பை, திருத்தணி பஜார் பகுதி, மேல் திருத்தணி, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, கே.ஜி. கண்டிகை.மீஞ்சூர், பொன்னேரி, தச்சூர், காரனோடை, கும்மிடிப்பூண்டி பாலகிருஷ்ணாபுரம் சந்திப்பு, சிறுவாபுரியில் பேனர் வைப்பது அதிகரித்துள்ளது.இவ்வாறு வைக்கப்படும் விளம்பர பேனர்களால் மற்றும் மொபைல்போன் டவர்களால் வாகன ஒட்டிகள் கவனம் சிதறி விபத்து ஏற்படும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி