மேலும் செய்திகள்
ஏரிகளில் மீன் வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம்
22-Jan-2025
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் ஏராளமான மலைகள் உள்ளன. மலை சார்ந்த வயல்வெளியில் மாந்தோப்புகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு ஆண்டு வருவாய் கணிசமாக கிடைக்கிறது. மார்ச் முதல், ஜூலை மாதம் வரை நீடிக்கும் மாங்கனி சீசனில், மாங்கனிகளை ஆந்திர மாநிலம், புத்துார், சித்துார் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கிவரும் பழச்சாறு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.பூ பூக்கும் மாதம் எனப்படும் தை மாதத்தில் தற்போது மாமரங்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. சில தோப்புகளில், ஒரு சில மாங்கனி ரகங்களில் பிஞ்சுகள் விட்டுள்ளன. அடுத்த ஒன்றரை மாதத்தில், மாங்கனிகள் பறிப்புக்கு தயாராகிவிடும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.கவாத்து பணிகளின் போது மாந்தோப்புகளின் வேலியை அகற்றிய விவசாயிகள் தற்போது, மீண்டும் முள்வேலி அமைத்து பாதுகாப்பதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.காவலுக்காக, தோப்புகளில் குடில் அமைத்து தொடர் பாதுகாப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். தரமான- உள்ளூர் மாங்கனிகளை தோட்டத்து புத்துணர்ச்சியுடன் சுவைக்க பள்ளிப்பட்டு பகுதிவாசிகளும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
22-Jan-2025