மேலும் செய்திகள்
இன்று இனிதாக பகுதிக்கு (நாள்/26/02/2025/புதன்)
26-Feb-2025
திருவள்ளூர், திருவள்ளூர் அடுத்த காக்களூர் நியூ மாருதி டவுன் பகுதியில், செல்வகணபதி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பூஜை முடிந்து, இரவு 9:00 மணிக்கு கோவில் பூட்டப்பட்டது.நேற்று காலை 6:00 மணிக்கு பார்த்த போது, கோவில் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த, 24 செப்பு கலசம், பித்தளை பொருட்கள், உண்டியல் வருவாய் 2,000 ரூபாய் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கோவில் நிர்வாகி முனிநாதன் அளித்த புகாரின்படி, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருவள்ளூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
26-Feb-2025