உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பறிமுதல் வாகனங்களை ஏலம் எடுக்க அழைப்பு

பறிமுதல் வாகனங்களை ஏலம் எடுக்க அழைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட, 26 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளன.திருவள்ளூர் மாவட்ட காவல்துறை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில், காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 23 இருசக்கர வாகனம், 3 நான்கு சக்கர வாகனம் என, மொத்தம் 26 வாகனங்கள், வரும் 30ல் திருவள்ளூர் ஆயுதப்படை மைதானம் அருகே ஏலம் விடப்பட உள்ளன. வாகனங்களை ஏலம் கேட்க வருவோர், முன் வைப்பு கட்டணத் தொகையாக இருசக்கர வாகனத்திற்கு 1000, 4 சக்கர வாகனத்திற்கு 5000 ரூபாய் செலுத்த வேண்டும். அதற்கான 'டோக்கன்' அன்று காலை 8:00-10:00 மணிவரை வழங்கப்படும்.வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் ஏலம் கேட்ட தொகையுடன் இருசக்கர வாகனத்திற்கு அரசு விற்பனைவரி 12 சதவீதம், 4 சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம் உடனடியாக செலுத்த வேண்டும். வாகனத்தின் விபரம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பீட்டுத் தொகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக தகவல் அறிவிப்புப் பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை