உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பெண்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

பெண்களை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், டி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஜெயந்தி, 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் வினோத்குமார், 35; இருவர் நிலமும் அருகருகே உள்ளது.மேலும், இருவருக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளன. நேற்று காலையில், ஜெயந்தி, மாமியருடன் தன் பூந்தோட்டத்தில் பூ பறித்துக் கொண்டிருந்தார்.அப்போது, வினோத்குமார், அவரது மனைவி வசந்தி, தந்தை கோவிந்தசாமி ஆகியோர் வந்து ஜெயந்தி, அவரது மாமியாரிடம் தகராறு செய்தனர்.மேலும், வயல்வெளியில் இருந்த கற்களால் தாக்கியதில் ஜெயந்தி தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரது மாமியார் காயமின்றி தப்பினார்.பின், ஜெயந்தி, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜெயந்தி அளித்த புகாரையடுத்து, கனகம்மாசத்திரம் போலீசார் மேற்கண்ட மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை