உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பு

திருவாலங்காடு,திருவாலங்காடு ஒன்றியம், அத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ்வரி 42. இவர் நேற்று காலை சின்னம்மாபேட்டையில் நடந்த உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனத்தில், திருவாலங்காடு நெடுஞ்சாலை வழியாக வீடு திரும்பினார்.சின்னம்மாபேட்டை மெயின் ரோடில் சென்ற போது பல்சர் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் கழுத்தில் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து தப்பி சென்றனர்.இதில் மகேஷ்வரி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தார்.அவரை மீட்டு அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள், 108 ஆம்புலன்ஸ் வாயிலாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்