உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வீடுகளில் வழிபட களிமண் விநாயகர் ரெடி

வீடுகளில் வழிபட களிமண் விநாயகர் ரெடி

கும்மிடிப்பூண்டி : விநாயகர் சதுர்த்தி தினத்தில், களிமண்ணில் தயாரித்த சிறிய விநாயகர் சிலைகளை வாங்கி, வீடுகளில் வைத்து வழிபட்ட பின், நீர் நிலைகளில் அந்த சிலைகளை கரைப்பது வழக்கம். அதன் வாயிலாக, நீர் நிலைகளில் இருந்து எடுக்கப்பட்ட களிமண்ணை, மீண்டும் இயற்கை வசம் ஒப்படைக்கும் முறையை நாம் கடைபிடித்து வருகிறோம்.இன்று, விநாயகர் சதுர்த்தி கொண்டாட இருப்பதால், கடந்த இரு தினங்களாக, அனைத்து பகுதிகளிலும், களிமண் சிலை தயாரிப்பதற்கான பணிகளில் குயவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் அருகே திப்பன்பாளையம் கிராமத்தில் அரை அடி முதல் ஒன்றரை அடி உயரம் வரையிலான களிமண் விநாயகர் சிலைகளை தயாரித்து வருகின்றனர்.இரு அச்சுகளுக்கு இடையில் களிமண்ணை நிரம்பி, சிறிது நேரம் கழித்து அச்சுக்களை பிரிக்கும்போது, அழகிய வடிவில் விநாயகர் சிலை எடுத்து ஒன்றன் பின் ஒன்றாக சிலைகளை அடுக்கி வைக்கின்றனர். 75 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ