முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி துவக்கம்
திருவள்ளூர்: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி, வரும் 24 வரை நடக்கிறது.திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள், இன்று 10-24ம் தேதி வரை திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த விளையாட்டரங்கம், நசரேத் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, யூனிக் அகாடமி, திருவள்ளூர், ஏ.கே.ஸ்போர்ட்ஸ் கிளப், அரண்வாயல், தமிழ்நாடு சிறப்பு காவல் 5ம்அணி, வைஷ்ணவி நகர், ஆவடி மற்றும் ஐ.சி.எப்., மேல்நிலைப் பள்ளி வளாகம், ஆவடி ஆகிய இடங்களில் நடக்கிறது.பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர் மற்றும் பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில், நீச்சல், தடகளம், செஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தில் பதிவு செய்த வீரர், வீராங்கனைகள் போட்டி நடைபெறும் 30 நிமிடங்களுக்கு முன்பாக உரிய ஆவணங்களுடன் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் வருகையை பதிவு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.