உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணி தாலுகாவில் கலெக்டர் அதிரடி விசிட்

திருத்தணி தாலுகாவில் கலெக்டர் அதிரடி விசிட்

திருத்தணி:திருத்தணி தாலுகாவில், திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியத்தில், முதல்வர் ஸ்டாலின் அறிவித்த 'உங்களைத் தேடி; உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், நேற்று திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.திருவாலங்காடு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு வந்த கலெக்டர், அங்கு நோயாளிகளின் குறைகளை கேட்டறிந்து, மருத்துவர்கள் சரியான முறையில் வந்து சிகிச்சை அளிக்கின்றனரா எனக் கேட்டறிந்தார்.பின், திருவாலங்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஆய்வு செய்த பின், திருத்தணி கார்த்திகேயபுரம், தாழவேடு ஆகிய ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.தொடர்ந்து தாழவேடு, முருக்கம்பட்டு ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்புகளை பார்வையிட்டார்.திருத்தணி புதிய பேருந்து நிலையம் மற்றும் காவல் நிலையங்களை ஆய்வு செய்தார். திருத்தணி தாலுகா அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடந்தது. பின், மக்களிடம் மனுக்கள் பெற்றார். இதில், திருத்தணி கோட்டாட்சியர் தீபா உட்பட அனைத்து துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

தலைமை ஆசிரியருக்கு 'டோஸ்'

திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், கலெக்டர் பிரபுசங்கர் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, 980 மாணவர்களில், 180 மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதை கண்டுபிடித்த கலெக்டர், ''ஏன் மாணவர்கள் பள்ளிக்கு வருவதில்லை? ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் என்ன செய்கிறீர்கள்? மாணவர்கள் வருகை கூட கவனிக்காமல் பள்ளி தலைமை ஆசிரியர் என்ன செய்கிறார்? தலைமை ஆசிரியரின் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?'' என, கடிந்து கொண்டார். மேலும், ''இரண்டு மாதங்களாக பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ஏன் நடத்தவில்லை?'' என, சரமாரி கேள்விகளை கேட்டு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை கடிந்துரைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்