உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு மருத்துவமனையில் பணியில் இல்லாத மருத்துவர்களை கண்டித்த கலெக்டர்

அரசு மருத்துவமனையில் பணியில் இல்லாத மருத்துவர்களை கண்டித்த கலெக்டர்

திருத்தணி:திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிப்பதில்லை என, நோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.இந்நிலையில், நேற்று, மாலை 3:00 மணிக்கு, கலெக்டர் பிரதாப், வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியோர், திருத்தணி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.அப்போது, மருத்துவமனையில் ஒரு மருத்துவர் பணிபுரிந்து வந்ததை கண்டார். அதையடுத்து கலெக்டர், மீதமுள்ள மருத்துவர்கள் எங்கே, வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட மருத்துவர்கள், மற்றும் ஊழியர்கள் எங்கே என கண்டித்தார்.இனிவரும் நாட்களில் இதுபோல பணியில் நேரத்தில் இல்லாத மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டர் கண்டித்தார்.அதை தொடர்ந்து, மகப்பேறு வார்டு, உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுபவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து ஆறுமுக சுவாமி கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று ஆய்வு, ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என, மக்களிடம் கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது திருத்தணி தாசில்தார் மலர்விழி மற்றும் மாவட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !