உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் சேராத மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

பிளஸ் 2 முடித்து கல்லுாரியில் சேராத மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பட்டரைப்பெரும்புதூரில் அமைந்துள்ளது அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி. இக்கல்லூரி கூட்டரங்கில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி என்ற முகாம் நடந்தது . திருவள்ளூர் கலெக்டர் பிரபு சங்கர் துவக்கி வைத்தார். பிளஸ் 2 வகுப்பு முடித்து கல்லுாரிக்கு விண்ணப்பிக்காத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் உயர்வுக்குப் படி முகாம்கள் வாயிலாக அரசு வழிகாட்டுதல்கள் வழங்கியது. அதன்படி 2022-- 23 மற்றும் 2023- -24 ம் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேராத மாணவர்கள் இனம் காணப்பட்டு உதவ உள்ளன. இம்முகாம் உயர்கல்வி வாய்ப்புகளை பெறாத மாணவர்களுக்கு பேருதவியாக அமைந்துள்ளது.முகாமில் கலெக்டர் பிரபு சங்கர் பேசியதாவது :மாணவர்களுக்கு தேவையான வருவாய் சான்றிதழ்களை வழங்க துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். உயர்கல்வி பயில முன்னோடி வங்கிகள் வாயிலாக கல்விக் கடன் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற ஆலோசனை வழங்கப்படும்.மாணவர்களுக்கு படிப்பு வேட்கை இருக்க வேண்டும். தோல்வி என்பது நிரந்தரமல்ல தோல்வியை கண்டு அஞ்சி விடாமல் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் படிப்பு என்ற பயணத்தை தொடருங்கள். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி முதல்வர் கயல்விழி, உட்பட பலர் பங்கேற்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ