| ADDED : ஜூலை 17, 2024 12:33 AM
சென்னை, ராகவேந்திரா கிளப் சார்பில், கல்லுாரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி, தி.நகரில் உள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது.இப்போட்டியில் மாணவியர் பிரிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவ், டபிள்யூ.சி.சி., - வேல்ஸ் உட்பட 10 அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'நாக் - அவுட்' மற்றும் 'லீக்' முறையில் நடந்தன.அனைத்து 'நாக் - அவுட்' போட்டிகள் முடிவில், வேல்ஸ் பல்கலை, எம்.ஓ.பி., ஜேப்பியார், எத்திராஜ் ஆகிய நான்கு அணிகள் 'லீக்' சுற்றுக்கு தகுதி பெற்றன. 'லீக்' போட்டியில் எம்.ஓ.பி., அணி, 71 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வேல்ஸ் பல்கலை அணியை தோற்கடித்தது. மற்ற போட்டியில் எம்.ஓ.பி., அணி, 64 - 40 என்ற புள்ளிக்கணக்கில் ஜேப்பியார் அணியையும், 70 - 38 என்ற கணக்கில் எத்திராஜ் அணியையும் வீழ்த்தியது.அனைத்து போட்டிகள் முடிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் அணி முதலிடத்தையும், வேல்ஸ் பல்கலை இரண்டாம் இடத்தையும், ஜேப்பியார் மற்றும் எத்திராஜ் அணிகள் முறையே, மூன்று மற்றும் நான்காம் இடங்களையும் பிடித்தன.