உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பைக் விபத்தில் கல்லுாரி மாணவன் பலி

பைக் விபத்தில் கல்லுாரி மாணவன் பலி

திருத்தணி,:திருத்தணி ஆசிரியர் நகர் கிருஷ்ணன் தெருவைச் சேர்ந்தவர் ஜோதி மகன் ஜெகன்,18. இவர் சென்னை வண்டலுார் பகுதியில் இயங்கி வரும் அப்போலோ கல்லுாரியில், பி.காம்., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று மதியம் ஜெகன், தனது இரு சக்கர வாகனத்தில், பைபாஸ் ரவுண்டாவில் இருந்து சித்துார் நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ரயில்வே பாலம் கீழ் செல்லும் போது, பின்னால் திருப்பதியில் இருந்து காஞ்சிபுரம் பகுதிக்கு சிமென்ட் ஏற்றி வந்த லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் ஜெகன் லாரி சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி பலியானார். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ