உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரயில்வே ஊழியரை வெட்டிய கல்லுாரி மாணவர்கள் கைது

ரயில்வே ஊழியரை வெட்டிய கல்லுாரி மாணவர்கள் கைது

கடம்பத்தூர்Lகடம்பத்தூர் ஊராட்சி வெண்மனம்புதூர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ், 28 ரயில்வே ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர் கடந்த 13ம் தேதி வீட்டின் அருகே வாலிபால் விளையாடும் போது ஏற்பட்ட தகராறில் அதே பகுதியை சேர்ந்த சட்டக் கல்லுாரி மாணவரான கமலேஷ், 22 மற்றும் லயோலா கல்லுாரி மாணவரான கனிஷ்கர், 22 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டார்.படுகாயம் அடைந்த தினேஷ் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிந்த கடம்பத்தூர் போலீசார் அவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் ரயில்வே ஊழியரை வெட்டியவர்களை கைது செய்யக்கோரி அப்பகுதிவாசிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து கடம்பத்தூர் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.இந்நிலையில் நேற்று கமலேஷ் மற்றும் கனிஷ்கர் ஆகிய இருவரை கைது செய்த போலீசார் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ