உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலையில் சரிந்த கன்டெய்னரால் பரபரப்பு

சாலையில் சரிந்த கன்டெய்னரால் பரபரப்பு

கும்மிடிப்பூண்டி:ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து பிளைவுட் ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி ஒன்று, நேற்று மதியம் சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது. நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ், 39 என்பவர் ஓட்டிச்சென்றார்.சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் சோதனைச்சாவடியில் உள்ள பேரிகாட்களுக்கு இடையே வளைந்து கடக்கும் போது, லாரியில் இருந்து கன்டெய்னர் மட்டும் தனியாக சரிந்து சாலையில் கவிழ்ந்தது.பலத்த சத்தத்துடன் கவிழ்ந்ததால் ஆரம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸ் சோதனைச்சாவடியில், போலீசார் யாரும் இல்லாததால், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.இந்த விபத்தால், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை