உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரிக்கரை பாதையில் சாலையோர தடுப்புகள் சேதம்

ஏரிக்கரை பாதையில் சாலையோர தடுப்புகள் சேதம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் இருந்து, பொதட்டூர்பேட்டைக்கு ஏரிக்கரை வழியாக தார் சாலை வசதி உள்ளது. இந்த வழியாக, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் மற்றும் ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், அம்மையார்குப்பம் உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பகுதிவாசிகள் மற்றும் நெசவாளர்கள் பொதட்டூர்பேட்டைக்கு பயணிக்கின்றனர். தினசரி, நுாற்றுக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன. அத்திமாஞ்சேரிபேட்டை ஏரிக்கரை மீது பயணிக்கும் வாகனங்களின் பாதுகாப்பு கருதி, ஏரிக்கரை ஓரத்தில் இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை துறை சார்பில் பொருத்தப்பட்ட இந்த தடுப்புகள், தற்போது உருக்குலைந்து சிதறிக்கிடக்கின்றன. பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட தடுப்புகளை, தற்போது விபத்து ஏற்படுத்தும் விதமாக சாலையோரம் சிதறி கிடக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர். மேலும் சாலையோரம் நடந்து செல்லும் பாதசாரிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். காலை மற்றும் மாலை நேரத்தில், இந்த வழியாக நடைபயிற்சியில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பு கருதி, இந்த இரும்பு தடுப்புகளை சீரமைத்து, முறையாக பொருத்த வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ