| ADDED : ஜூன் 15, 2024 12:50 AM
திருவள்ளூர்:பூண்டி நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம் வீசுவதுடன், மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, திருவள்ளூர் மாவட்டம் பூண்டியில் கொசஸ்தலை ஆறு நடுவில் சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் கடந்த 1944ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது, கோடை வெப்பத்தால், நீர்தேக்கத்தில் உள்ள தண்ணீர் ஆவியாகி வருகிறது. மேலும், கிருஷ்ணா நீர்வரத்தும் இல்லாததால், நீர்தேக்கத்தில் தண்ணீர் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. நீர்தேக்கத்தில் தண்ணீர் மிக குறைவாக இருப்பதால், இங்குள்ள மீன்கள் செத்து, கரையோரம் மிதந்து, துர்நாற்றம் வீசுகிறது. தற்போது, செத்து மிதக்கும் மீன்களில் கொசு, ஈ சுற்றி வருவதால், அருகில் வசிப்போருக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.எனவே, பொதுப்பணி-நீர்வள ஆதாரத்துறையினர் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.