கடைக்குள் புகுந்த மான் பெரியபாளையத்தில் மீட்பு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த சீத்தஞ்சேரி காப்பு காட்டில் அதிகளவு மான்கள், நரி உள்ளிட்டவை உள்ளன. அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீருக்காக அருகே உள்ள கிராமங்களில் தஞ்சம் அடைவது வாடிக்கை.நேற்று காலை பெரியபாளையம் பேருந்து நிலையம் அருகே, திடீரென ஒரு புள்ளி மான் அங்கும், இங்குமாக ஓடியது. இதை பார்க்க மக்கள் கூடியதால், அச்சமடைந்த புள்ளி மான் அங்குள்ள ஒரு கடைக்குள் தஞ்சமடைந்தது.தகவல் அறிந்து வந்த சீத்தஞ்சேரி வனத்துறையினர், புள்ளி மானை மீட்டு, அருகே வனப்பகுதியில் உள்ள விட்டனர்.