உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை

அரசு உயர்நிலைப்பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் மேல்நல்லாத்துாரில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. இங்கு, மேல்நல்லாத்துார், கீழ்நல்லாத்துார், நுங்கம்பாக்கம், போளிவாக்கம், அதிகத்துார் என 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த, 390 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 10ம் வகுப்பு வரை இந்த பள்ளியில் படிக்கும் மாணவியர் அதன்பிறகு அருகில் மேல்நிலைப்பள்ளி அல்லது 10 கி.மீ., துாரமுள்ள திருவள்ளூர், பாப்பரம்பாக்கம், பேரம்பாககம் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் பள்ளிக்கு சென்று கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உய்த்த வேண்டுமென பலமுறை மனு அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் அரசு உயர்நிலைப்பள்ளியை, மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ