உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்

பொன்னேரியில் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் இருந்து மாமல்லபுரம் வரை, 133 கி.மீ., தொலைவிற்கு சென்னை எல்லை சாலை திட்டத்திற்கான பணிகள் நடக்கிறது. இப்பணிகளுக்காக, கும்மிடிப்பூண்டி அடுத்த கரடிப்புத்துார் கிராமத்தில், செம்மண் குவாரிக்கு கனிமளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.இதற்கு கரடிப்புத்துார் கிராமவாசிகள் மற்றும் வி.சி., கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து, குவாரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ள இடத்தில், இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கு பதியப்பட்டது. இதை கண்டித்து, நேற்று வி.சி., கட்சியின் சார்பில், பொன்னேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !