உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனவு இல்லம் 250 பயனாளருக்கு பணி ஆணை

கனவு இல்லம் 250 பயனாளருக்கு பணி ஆணை

திருவாலங்காடு:திருவாலங்காடில் கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகளுக்கு, தொகுப்பு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி பி.டி.ஓ., அலுவலக கூட்டரங்கில் நடந்தது.ஊரக உள்ளாட்சித் துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பி.டி.ஓ., காளியம்மாள் தலைமை வகித்தார். திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில் இருந்து 250 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அவர்களுக்கு, திருவள்ளூர் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜேந்திரன் பணி ஆணை வழங்கினார். இதில், திருவாலங்காடு ஒன்றிய தி.மு.க., செயலர் மகாலிங்கம், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை