உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சத்தரை பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

சத்தரை பகுதியில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்

கடம்பத்துார், திருப்பாச்சூர் - கொண்டஞ்சேரி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது சத்தரை ஊராட்சி.இப்பகுதியில் உள்ள கூவம் ஆறு அருகே நெடுஞ்சாலையோரம் 2023-2024ம் ஆண்டு 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் கொண்டஞ்சேரி ஊராட்சி புதிய காலனி பகுதிக்கு 3 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, அங்கிருந்து குழாய் மூலம் குடிநீர்கொண்டு செல்லப்படுகிறது.இதில் ஆழ்துறை கிணறு அமைக்கப்பட்டுள்ள பகுதி அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த சில தினங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து பகுதிவாசிகள் சம்பந்தப்பட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும், அதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை