மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் சாலையில் இயங்கி வரும் திருத்தணி வருவாய் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை பகல் 11:00 மணிக்கு நடக்கிறது.இதில், திருவள்ளூர் மின்பகிர்மான மேற்பார்வையாளர், திருத்தணி கோட்ட செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் பங்கேற்கின்றனர். எனவே, வருவாய் கோட்டத்தில் உள்ள மக்கள் மற்றும் விவசாயிகள், மின் தொடர்பான பிரச்னைகளை மனுவாக அளிக்கலாம்.