மின்சாரம் தாக்கி ஊழியர் பலி
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு அடுத்த டி.வி.கண்டிகையை சேர்ந்தவர் விநாயகம், 44. இவர், பள்ளிப்பட்டு துணைமின்நிலையத்தில் கம்பியாளராக பணியாற்றி வந்தார். நேற்று காலை பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் எதிரே வீட்டு மின் இணைப்பு பழுது பார்க்க வந்திருந்தார். அங்கிருந்த மின்கம்பத்தில் ஏறி மின்கம்பியை துண்டிக்க முற்பட்டார். அப்போது உயர் மின்னழுத்த கம்பி உரசியதில் உடல் கருகி கீழே விழுந்து பலியானார். இது குறித்து பள்ளிப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.