மேலும் செய்திகள்
சுற்றுலா பயணியரை சுண்டி இழுக்கும் சூளகெரே ஏரி
27-Feb-2025
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே ஏடூர் கிராமத்தில், கொண்டமாநல்லுார் நோக்கி செல்லும் சாலையோரம், 3 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது புள்ளேரி. பரந்து விரிந்து காணப்படும் அந்த ஏரி, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ள ஏரி.பத்து ஆண்டுகளுக்கு முன் வரை வற்றாத ஏரியாக இருந்த நிலையில், தற்போது வறண்டு காணப்படுகிறது. பராமரிக்க தவறியதால், ஏரி துார்ந்து போய், மழைநீரை தேக்கி வைக்கும் தன்மையை இழந்ததுடன், நிலத்தடி நீர் குறைந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.ஏரியை துார்வாரி, புத்துயிர் அளித்து முறையாக பராமரிக்க வேண்டும் என, ஏடூர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-Feb-2025