மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
சோழவரம்:சோழவரம் அருகே அழிஞ்சிவாக்கத்தில் வசித்தவர் ஹரிபிரசாத், 48; விவசாயி. நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் மழை பெய்ததால், அவரது விவசாய நிலைத்தில் உள்ள மின் மோட்டர் அறை மீது மின் கம்பி அறுந்து விழுந்தது.வழக்கம் போல் நேற்று காலை, தனது விவசாய நிலத்திற்கு, உறவினர் வாசு என்பவருடன் ஹரிபிரசாத் சென்றார். அங்கு, மோட்டர் அறையின் இரும்பு ஷீட் மேற்கூரையை தொட்ட போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து அதே இடத்தில் உயிரிழந்தார்.உடன் சென்ற வாசுவுக்கு காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மின் வாரியத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.சோழவரம் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். சோழவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.