உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருத்தணி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கண்டன ஆர்பாட்டம் நேற்று மாவட்ட பொருளாளர் பெருமாள் தலைமையில் நடந்தது. இதில், மாவட்ட செயலர் சம்பத், மாவட்ட துணைத் தலைவர் அப்சல் அகமது உட்பட 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துக் கொண்டு, பயிர்களை சேதப்படுத்தும் காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த, கேரளா மாநிலம் போல் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அனுமதி வழங்க வேண்டும்.மேலும் மான், மயில், நாய், யானை மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளால் ஏற்படும் பயிர் பாதிப்புகளுக்கு காப்பீடு வழங்க வேண்டும், மனித உயிரிழப்பிற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகையாக அரசு வழங்க வேண்டும். காட்டுப்பன்றிகள் சேதப்படுத்திய பயிர்களுக்கு உரிய நிவாரணம் அரசு சார்பில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன கோஷம் எழுப்பினர். தொடர்ந்து விவசாயிகள், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரியிடம் கோரிக்கை மனு அளித்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ