உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டுறவு வங்கியில் தீ விபத்து

கூட்டுறவு வங்கியில் தீ விபத்து

திருத்தணி:திருத்தணி ஒன்றியம் வி.கே.எண்.கண்டிகை கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. வங்கியின் செயலராக திருவள்ளூரைச் சேர்ந்த குணசேகர், 52, என்பவர் பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல, பணி முடிந்து அலுவலகத்தை குணசேகர் பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை வங்கி கட்டடத்தில் இருந்து புகை வெளியேறியது. அவ்வழியாக சென்றவர்கள் குணசேகருக்கு தகவல் தெரிவித்தனர். பின், குணசேகர் அலுவலகத்தை திறந்து பார்த்த போது, அலுவலகத்தில் இருந்த இரண்டு கணினி, பிரின்டர், மேஜை, நாற்காலி ஆகியவை தீயில் எரிந்து நாசமாகின.இதுகுறித்து குணசேகர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி