உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / லாரி ஓட்டுனரை தாக்கி செயின் பறித்த ஐவர் கைது

லாரி ஓட்டுனரை தாக்கி செயின் பறித்த ஐவர் கைது

திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி, 49. லாரி ஓட்டுனரான இவர் நேற்று முன்தினம் திருப்பாச்சூர் ஏரியிலிருந்து சவுடு மணலை ஏற்றிக் கொண்டு தன் மனுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது கைவண்டூர் ஏரி அருகே லாரி வந்த போது புல்லரம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தீனா, 40, ஜெகன், 35, வருண், 36, ராஜேஷ், 30 மற்றும் கொசவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோபி, 30 ஆகிய ஐந்து பேரும் லாரியை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். பின் ராமமூர்த்தி மற்றும் அவரது மகனை ஆபாசமாக பேசி கழுத்தில் கிடந்த 2 சவரன் தங்க நகையை பறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.இதுகுறித்த ராமமூர்த்தி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை