மேலும் செய்திகள்
போதை பொருட்கள் பறிமுதல்: இருவர் கைது
27-Feb-2025
ஊத்துக்கோட்டை, ஆந்திர மாநிலத்தில்இருந்து, ஊத்துக்கோட்டை வழியாக தமிழகத்திற்கு கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின் பேரில், பெரியபாளையம் மதுவிலக்கு போலீசார்,ஊத்துக்கோட்டை சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்போது, இரண்டு பைக்குகளை மடக்கி சோதனை செய்தனர். அதில் வந்த நான்குபேரிடம், 21.50 கிலோ, கஞ்சா இருந்ததுதெரியவந்தது. விசாரணையில், ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரைச்சேர்ந்த அஜித், 19,அழகிரிபேட்டை டில்லிபாபு, 40, வினோத்குமார், 31, மணலி புதுநகர் மது, 34, என தெரிந்தது.இதில், அஜித் மீது புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நான்கு பேரையும் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.மேலும், இரண்டுபைக்குகள் மற்றும்மூன்று மொபைல்போனை ஆகியவற்றைபறிமுதல் செய்தனர்.
27-Feb-2025