உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், சொரக்காய்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் பிளஸ் 1 மாணவர்களுக்கு நேற்று இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டன. இதற்கான விழாவில், திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைமையாசிரியர் சம்பத் வரவேற்றார்.பள்ளி மாணவர்களுக்கு அரசு வழங்கும் நலத்திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்த சந்திரன், வட்டாரத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களாக, சொரக்காய்பேட்டை பள்ளி மாணவர்கள் விளங்க வேண்டும் என வலியுறுத்தினார். அதை தொடர்ந்து, 48 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். மேலும், சொரக்காய்பேட்டையில், புதிய ஊராட்சி மன்ற கட்டடத்திற்கு, எம்.எல்.ஏ., சந்திரன் அடிக்கல் நாட்டினார். இதே போல், ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திலும் பல்வேறு வளர்ச்சி பணிகளை நேற்று துவக்கி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை