உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்

திருத்தணி, நாடு முழுதும் விநாயகர் சதுர்த்தி விழா, வரும் 7ம் தேதி கொண்டாப்பட உள்ளது. இந்நிலையில், திருத்தணி சேகர்வர்மா நகர், அரக்கோணம் சாலை மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில், ஆறு பேர் கொண்ட குழுவினர் சிலை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் 1 - 6 அடி உயரம் வரை பேப்பர் மோல்டுகளால் தயார் செய்து வருகின்றனர். இந்த சிலைகள் தண்ணீரில் எளிதாக கரையும். வாட்டர் கலர் பெயின்ட் வாயிலாக, பல்வேறு வண்ணங்களில் சிலைகள் தயாரிக்கப்படுகிறது. கற்பக விநாயகர், வேட்டை விநாயகர், கருட விநாயகர், அரியணையில் முண்டாசு கட்டி அமர்ந்த நிலையில் இருக்கும் விநாயகர் மற்றும் ஆஞ்சநேயர், நரசிம்மர், கலைவாணி, சரஸ்வதி உட்பட மூன்று தலைகளுடன் பல்வேறு வடிவத்தில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.இங்கு தயாரிக்கும் விநாயகர் சிலைகள், குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல், 12,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சிலைகள் தயாரிக்கும் பணியில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். மக்களும் ஆர்வத்துடன் சிலைகளை வாங்கிச் செல்கின்றனர்.இதே போல திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில், தொடுகாடு பகுதியில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்களால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மூன்று அடி முதல் 20 அடி வரை சிலைகள் தயாரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டு விற்பனைக்கு தயாராக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை