உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இணைப்பு சாலையில் உயரமான வேகத்தடை

இணைப்பு சாலையில் உயரமான வேகத்தடை

திருவள்ளூர்,:சென்னை மதுரவாயல் முதல் வாலாஜா வரையிலான 98 கி.மீ நீளச் சாலை 2014-ம் ஆண்டு , 6 வழிச்சாலையாக விரிவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு, 2018-ம் ஆண்டின் இறுதியில் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரையிலான 23 கி.மீ நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜா வரையிலான 71 கி.மீ நீள சாலைவிரிவாக்கப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள இணைப்பு சாலையில் செம்பரம்பாக்கம் பகுதிக்கு செல்லும் சாலை இணைப்பு சாலை பகுதியில் உயரமான வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது.10 செ.மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட வேண்டிய வேகத்தடை விதியை மீறி, உயரமாக அமைக்கப்பட்டதால் வாகனங்களில் செல்வோர் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இரவு நேரத்தில் விபத்தில் சிக்கி வருகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெடுஞ்சாலை இணைப்பு சாலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ