மேலும் செய்திகள்
தீயணைப்பு நிலையங்களில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
21 hour(s) ago
கழிவுநீர் கால்வாய் சேதம்
21 hour(s) ago
நெல் பயிரிட்ட நிலப்பரப்பு தவறான தகவல்கள் பதிவு
11-Oct-2025
மளிகை கடையில் மது விற்றவர் கைது
11-Oct-2025
சென்னை: சென்னை, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் ஜோசப், 41. இவரது மனைவி ஆனந்தீஸ்வரி, 35. டிரைவரான ஜோசப், மற்றொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதை அறிந்த ஆனந்தீஸ்வரி, அதுகுறித்து கேட்டுள்ளார். இதனால், தம்பதி இடையே அவ்வவ்போது சண்டை ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், 2022 மே., 5ல் வீட்டில் இருந்த மனைவியுடன், ஜோசப் சண்டையிட்டுள்ளார். அப்போது, சமையலறையில் இருந்த கத்தியால், ஆனந்தீஸ்வரியை குத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த ஆனந்தீஸ்வரி சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இச்சம்பவம் தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோசப்பை கைது செய்தனர்.வழக்கு விசாரணை, அல்லிக்குளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ஸ்ரீதேவி முன் நடந்தது. அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆர்த்தி பாஸ்கரன் ஆஜரானார்.வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு:ஜோசப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளன.எனவே, அவருக்கு கொலை முயற்சி குற்றத்திற்கு ஐந்து ஆண்டு சிறையும், அபராதமாக 5,000 ரூபாயும் விதிக்கப்படுகிறது. தவிர, பெண்ணை அவமதிக்கும் வகையில் நடந்த குற்றத்திற்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும்.அச்சம்பவத்திற்கு பின், கணவரை பிரிந்து மனைவி சென்றுவிட்டார். எனவே, பெற்றோரை பிரிந்திருக்கும் ஆண் குழந்தைகளுக்கு தேவையான இழப்பீட்டை பெற, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
21 hour(s) ago
21 hour(s) ago
11-Oct-2025
11-Oct-2025