உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துாய்மையே சேவை விழிப்புணர்வு திருத்தணியில் துவக்கம்

துாய்மையே சேவை விழிப்புணர்வு திருத்தணியில் துவக்கம்

திருத்தணி:துாய்மை பாரத இயக்கம் சார்பில், திருவள்ளூர் மாவட்ட அளவில் 'துாய்மையே சேவை- - 2024' என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, நேற்று முதல் அடுத்த மாதம், 2ம் தேதி வரை நடக்கிறது. இதன் துவக்க விழா, நேற்று திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரத்தில் நடந்தது.இதில், கலெக்டர் பிரபுசங்கர் பங்கேற்று, மரக்கன்றுகள் நட்டு துாய்மையே சேவை விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், 100 நாள் தொழிலாளர்கள் மற்றும் துாய்மை பணியாளர்களுடன் கலெக்டர், 'துாய்மை குறித்தும், குப்பையை தெரு மற்றும் சாலைகளில் வீச மாட்டோம்' என, உறுதிமொழி ஏற்றார்.இந்த நிகழ்வில் மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயகுமார், திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, சந்தானம், ஒன்றிய பொறியாளர் தர்மேஷ், பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் துாய்மை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ