உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கஞ்சா வைத்திருந்த சிறுவர்களிடம் விசாரணை

கஞ்சா வைத்திருந்த சிறுவர்களிடம் விசாரணை

திருத்தணி:திருத்தணி அடுத்த மேல்திருத்தணி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள அரசு பள்ளி அருகே, 17 வயதுள்ள இரண்டு சிறுவர்கள் சந்தேகிக்கும்படி சுற்றித்திரிந்தனர். போலீசார் சிறுவர்களை மடக்கி பிடித்த போது, அவர்களது கையில் தலா, 50 கிராம் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை பறிமுதல் செய்து விசாரித்தனர். அவர்கள் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்க வந்ததாக தெரிய வந்தது. தொடர்ந்து திருத்தணி போலீசார் சிறுவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ