மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து ஆறரை பவுன் நகை திருட்டு
27-Aug-2024
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூந்தோட்ட நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி அமுதா, 33. கணவனை பிரிந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக தன் இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.கடந்த 5ம் தேதி இரு மகள்களையும் காக்களூர் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அனுப்பி விட்டு வீட்டை பூட்டி விட்டு, கட்டட பணிக்கு பட்டாபிராம் சென்று விட்டார். அன்று மாலை அமுதா வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஆறரை பவுன் தங்கம் மற்றும் 160 கிராம் வெள்ளி பொருட்கள் மாயமானது தெரிந்தது.திருவள்ளூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2024