உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பவானியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

பவானியம்மன் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

பெரியபாளையம்:தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களில் பெரியபாளையம் பவானியம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு பின் இன்று கும்பாபிேஷக விழா நடைபெற உள்ளது. தமிழகம், ஆந்திர மாநிலங்களின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் விழாவை காண வருவர். இதையொட்டி, பாதுகாப்பு, வாகன நிறுத்தம் உள்ளிட்ட பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.,கே.கணேஷ்குமார் கூறியதாவது:பவானியம்மன் கோவில் கும்பாபிேஷக பாதுகாப்பு பணியில், 800 போலீசார் ஈடுபட்டு உள்ளனர். பத்து இடங்களில் குடிநீர் வசதி, 200க்கும் மேற்பட்ட கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி நடைபெறும். பஸ் நிலையத்தில் இருந்து, பக்தர்களை ஏற்றிச் செல்ல, மினி பேருந்து இயக்கப்படும்.கும்பாபிேஷக விழாவில் தெளிக்கப்படும் தண்ணீரை ஒரு இடத்தில் இல்லாமல், எட்டு இடங்களில் தெளிக்க ஏ0ற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பக்தர்கள் தங்கள் விலை உயர்ந்த நகைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரிடம் தகவல் கொடுக்க வேண்டும்.அதிகளவு பக்தர்கள் வர காவல் துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பெண்கள் அணிந்து வரும் நகைகளுக்கு, காவல் துறை சார்பில், சேப்டி பின் வழங்கப்படும். வாகனங்கள் நிறுத்த இடவசதி செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் தரிசனத்திற்காக சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை