சிங்கிலிமேடில் 3 கோவில்களில் கும்பாபிஷேகம்
பொன்னேரி: பொன்னேரி அடுத்த சிங்கிலிமேடு கிராமத்தில் பிரசித்திபெற்ற, பனியாத்தம்மன், ஸ்ரீனிவாச பெருமாள், தையல் நாயகி சமேத வைத்தீஸ்வரர் ஆகிய கோவில்கள் உள்ளன.இக்கோவில்களில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. திருப்பணிகள் முடிந்த நிலையில், நேற்று மூன்று கோவில்களிலும் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடந்தது.கும்பாபிஷேக விழாவில் காலை, 6:00 மணிக்கு, நான்காம் கால பூஜைகளை தொடர்ந்து, கலச புறப்பாடு நடைபெற்றது. காலை, 8:30 மணிக்கு பனியாத்தம்மனுக்கும், காலை, 9:30மணிக்கு ஸ்ரீனிவாச பெருமாளுக்கும், காலை, 10:30 மணிக்கு, வைத்தீஸ்வரருக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் சன்னிதிகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடந்தன.