திருத்தணியில் மது பாட்டில் கடத்தியவர் கைது
திருத்தணி,சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருத்தணி நகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருசக்கர வாகனத்தில் வந்த, திருத்தணி அக்கடைநாயுடு தெருவை சேர்ந்த, ரமேஷ், 41 என்பவரை தடுத்து நிறுத்த முயன்றனர். தப்பி ஓடிய ரமேைஷ போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். அவரது வாகனத்தை சோதனை செய்தபோது 50 குவாட்டர் டாஸ்மாக் மது பாட்டில்களை கடத்தி வந்தது தெரிய வந்தது.