மாமன், மச்சான் கத்தி சண்டை மருத்துவமனையில் அட்மிட்
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் வி.சி.ஆர்.கண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 55; கூலி தொழிலாளி.இவர், நேற்று முன்தினம் குடிபோதையில் அதே பகுதியில் வசிக்கும் தங்கை லட்சுமியின் கணவர் ராஜு, 44, என்பவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.அப்போது, வெங்கடேசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜுவின் கையில் வெட்டினார். இதனால் ஆத்திரமடைந்த ராஜு, வெங்கடேசன் கழுத்தில் கத்தியால் வெட்டினார்.இதில் படுகாயமடைந்த இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.