மேலும் செய்திகள்
கஞ்சா கடத்திய இருவர் கைது
29-Jan-2025
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த, எளாவூர் சோதனைச்சாவடியில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், 24ம் தேதி, போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் பேருந்தில், பயணித்த ஓசூரை சேர்ந்த அருண் மேத்யூ ஹென்றி, 22, என்பவரிடம், 11 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.அவரை கைது செய்த போலீசார், கஞ்சா வாங்க பணம் கொடுத்ததாக, ஓசூரைச் சேர்ந்த ஜோஷ்வா, 22, என்பவரையும் அப்போதே கைது செய்தனர். கஞ்சா கடத்தில் வழக்கு பதிந்த, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், ஆந்திராவில், இவர்களுக்கு கஞ்சா வாங்கி கொடுத்த நபரை, தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று அவரை, ஆந்திராவில் கைது செய்தனர். அவர், ஆந்திர மாநிலம், நெல்லுார் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்கிற சந்திரமோகன், 44, ஆவார். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
29-Jan-2025